இந்து ஆலயங்களுக்கான கொடுப்பனவு வழங்கல்


புத்த சாசன மற்றும் மத விவகார கலாசார அலுவல்கள் அமைச்சின் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலங்கை பூராகவும் உள்ள 100 ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தையொட்டி தைப்பொங்கல் கொடுப்பனவு பிரதமரின் வழிகாட்டலில் முதன் முறையாக வழங்கப்பட்டது. இதில் அம்பாரை மாவட்டத்திலுள்ள 6 ஆலயங்கள் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.


அதில் இறக்காமம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், அட்டப்பள்ளம் ஸ்ரீ சிங்காரபுர மாரியம்மன் ஆலயம், பொத்துவில் குண்டுமடு ஆலையடிப்பிள்ளையார் ஆலயம், நாவிதன்வெளி மத்தியமுகாம் ஸ்ரீ முருகள் ஆலயம், சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் பத்திரகாளியம்மன் ஆலயம் ஆகியவற்றுக்கு இந் நிதி வழங்கப்பட்டது. 



காரைதீவு பிரதேச செயலக மண்டபத்தில் காரைதீவு பிரதோச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதமரின் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களுக்கான இணைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான வி.முரளிதரன் கலந்து கொண்டதோடு நிகழ்வினை அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஒருங்கிணைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து ஆலயங்களுக்கான கொடுப்பனவு வழங்கல் இந்து ஆலயங்களுக்கான கொடுப்பனவு வழங்கல் Reviewed by Editor on March 15, 2021 Rating: 5