பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு கெளரவிப்பு


கலாவெவ மத்திய கல்லூரியில் 2017 - 2019 ஆம் ஆண்டு விஞ்ஞானப்பிரிவில் கற்று பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மற்றும் 2021 ஆம் ஆண்டின் விஞ்ஞானப்பிரிவிற்கான மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (14) கலாவெவ மத்திய கல்லூரியின் கேற்போர் கூடத்தில் நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் ஜே.ஆப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் கலந்து கொண்டார்.




கௌரவ அதிதிகளாக Wisdom Academy இன் வளவாளர்களான டாக்டர் எம்.எச்.எம்.நளீப், எஸ்.எம்.எம்.ரீசா ஆசிரியர், ஏ.எச்.எம்.முபாஸ் ஆசிரியர், ஆர்.றமீசா ஆசிரியை, Wisdom Academy இன் இணைப்பாளர் எஸ்.ஏ.எம். சப்ரின் ஆசிரியர், கலாவெவ மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜே.முளாபர் ஆகியோரும் விசேட அதிதிகளாக கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர், தென்னாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர், தெமட்டாவ முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.











பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு கெளரவிப்பு பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு கெளரவிப்பு Reviewed by Editor on March 15, 2021 Rating: 5