புதிய பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் நியமனம்!!



(சர்ஜுன் லாபீர்)

சாய்ந்தமருது பிரதேச செயலாளராக நற்பிட்டிமுனைச் சேர்ந்த எம்.எம்.ஆஸீக் எதிர்வரும் (08) திங்கட்கிழமை தனது கடமைகளை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளார்.

சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய நிலையில் பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்ற  இவருக்கான நியமனக்கடிதம் அரச சேவைகள் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டது.

இவரது துணைவியார் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து நிந்தவூர் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் நியமனம்!! புதிய பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் நியமனம்!! Reviewed by Editor on March 05, 2021 Rating: 5