அரச காட்டுப் பகுதியில் மரநடுகை!

 

 (எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வன ஜீவராசிகள் மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் சர்வதேச வனாந்தர வாரத்தை முன்னிட்டு 'வன மறுசீரமைப்பு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பாதை' எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் வனபரிபாலன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை வட்டார வனபரிபாலன காரியாலயத்தின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை அரச காட்டுப் பகுதியில் இடம்பெற்றது.

மரநடுகை வேலைத் திட்டத்தில் புணாணை பௌத்த விகாரையின் விகாராதிபதி எல்லேவேவெ பீதாலங்கார ஸ்தவீர தேரர், வனவிரிவாக்கல் உத்தியோகத்தர்களான  எஸ்.எம்.சபீக், எம்.ஏ.ஏ.எச்.இஸாரி, பகுதிவன உத்தியோகத்தர்களான ஜி.அகிலன், ஏ.எச்.கியாஸ் உள்ளிட்ட வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அதிதிகள் மரநடுகை வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்துடன், மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் முன்னூற்றி ஐம்பது (350) மரக்கன்றுகள் புணாணை அரச காட்டுப் பகுதியில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.எம்.சபீக் தெரிவித்தார்.

அரச காட்டுப் பகுதியில் மரநடுகை! அரச காட்டுப் பகுதியில் மரநடுகை! Reviewed by Editor on March 25, 2021 Rating: 5