(முஹம்மட் அஸ்மி)
கிழக்கு மாகாணத்தில் மிகவும் வினைத்திறன் மிக்க கூட்டுறவு சங்கமாக மிளிர்கின்ற ஏறாவூர் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொன் விழா நிகழ்வும், ஊழியர்களுக்கான மிகை ஊதியம் வழங்கும் நிகழ்வும் நேற்று (24) புதன் கிழமை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் எம்.எல்.ஏ.லத்திப் அவர்களின் தலைமையில் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி (SLAS) அவர்களும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரான வீ. தங்கவேல் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் , கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்க இயக்குனர் சபை உறுப்பினர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிதாக நியமனம் பெற்ற கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அஸ்மி அவர்களை வாழ்த்தி வரவேற்று நினைவுச் சின்னமும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியாக சிறப்பாக செயற்பட்டமைக்கான விருதுகளையும் பாராட்டுக்களையும் ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
