சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் மறைவுக்கு தேசியக் காங்கிரஸின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் இன்று கல்முனை மாநகர சபையின் விசேட பொதுச் சபை அமர்வில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார்.
இதன்போது முஸ்லிம் சமூகத்தில் முன்மாதிரியான நம்பிக்கையாளர் சபை தலைவராகவும் ,ஆசான கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வை.எம். ஹனீபா அவர்கள் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக நியமனம் பெற்று பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்கு தன்னாலான அனைத்து பங்களிப்புகளையும் செய்தவராகவும், முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். மன்சூரின் இணைப்பாளராக இருந்து, சகல பிரதேசங்களுக்கும் அபிவிருத்திகளை கொண்டுசெல்வதில் அரும்பணியாற்றியவராகவும் மற்றும் பொதுப் பணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்துக் கொண்டு வந்த மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் மறைவு இப்பிரதேசத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் எனத் தெரிவித்தார்.
அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ,அன்னாரது சேவைகளை பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றும் மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் குறிப்பிட்டார்.
