உத்தியோகத்தர்களின் உளநலத்தை முகாமை செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு...

காரைதீவு பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் கொவிட் 19 காலப்பகுதியில் வெளிக்கள உத்தியோகத்தர்களின் உளநலத்தை  முகாமை செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (30) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.


நிகழ்வில் வளவாளராக டாக்டர். எம்.ஜே.நெளபல் கலந்துகொண்டு வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கினார். 



சமூக சேவை உத்தியோகத்தர், கிராம நிலைதாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.











உத்தியோகத்தர்களின் உளநலத்தை முகாமை செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு... உத்தியோகத்தர்களின் உளநலத்தை முகாமை செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு... Reviewed by Editor on March 31, 2021 Rating: 5