
கிழக்கு மாகாண ஆண்களுக்கான உடல்கட்டழகு போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக போட்டியிட்ட காரைதீவு பிரதேச இரு வீரர்களும் பதக்கம் வென்றுள்ளார்கள்.
போட்டியாளர்களான ஞானேந்திரன் தமிழ்செல்வன் 90 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மோகன் றிச்சன் 70 கிலோ எடைப் பிரிவில் வெங்கல பதக்கமும் பெற்றனர்.
அம்பாறை மாவட்டத்திலிருந்து சென்ற குழுவில் இவர்கள் இருவருமே தமிழ் போட்டியாளர்களாவர் என்பதும் இவர்கள் முதல்தடவையாக பங்கேற்றுள்ளார்கள்.
இப்போட்டி திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை (06) நடைபெற்றதோடு, இந்த மட்டபோட்டியில் முதலிரு இடங்களைப் பெற்றவர்கள் தேசியமட்டப்போட்டியில் பங்குபற்றத் தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உடல்கட்டழகு போட்டியில் காரைதீவு இளைஞர்கள் தெரிவு!
Reviewed by Editor
on
March 08, 2021
Rating:
Reviewed by Editor
on
March 08, 2021
Rating: