குடும்பஸ்தர் ஒருவர், மனைவி பிள்ளைகள் தாக்குதலில் உயிரிழப்பு!!!

 


மனைவி பிள்ளைகள் தாக்கியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு , பாரதி வீதியைச் சேர்ந்த கணேஷ் குணராசா (38) என்பவரே இந்த சம்பவத்தால் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த நபருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் இடையில் நேற்று (10) புதன்கிழமை இரவு ஏற்பட்ட தகராற்றினால் மனைவி பிள்ளைகள் அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலயே அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் பிள்ளைகள் மற்றும் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பஸ்தர் ஒருவர், மனைவி பிள்ளைகள் தாக்குதலில் உயிரிழப்பு!!! குடும்பஸ்தர் ஒருவர், மனைவி பிள்ளைகள் தாக்குதலில் உயிரிழப்பு!!!   Reviewed by Editor on March 11, 2021 Rating: 5