நவீன வர்த்தக நிலைய வளாகம் பிரதமரினால் திறந்து வைப்பு!



வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் கொழும்பு 12 சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள நவீனமயப்படுத்தப்பட்ட வர்த்தக நிலைய வளாகம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (05) வெள்ளிக்கிழமை முற்பகல்  திறந்துவைக்கப்பட்டது.  

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய உள்ளூர் உற்பத்தி பொருளாதாரத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் பணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இவ்வர்த்தக நிலைய வளாகம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.


நவீன வர்த்தக நிலைய வளாகத்தை திறந்துவைக்கும் முகமாக கௌரவ பிரதமர் நினைவு பலகையை திறந்து வைத்ததுடன், வைபவ ரீதியாக ரிப்பனினை வெட்டி கட்டிட வளாகத்திற்குள் பிரவேசித்தார்.

உலக வசிப்பிட தினத்தை முன்னிட்டு வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபன ஊழியர்களின் பிள்ளைகள் மத்தியில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு இதன்போது கௌரவ பிரதமரினால் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து  வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் நவீன வர்த்தக நிலைய வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள காட்சியறைகளை கௌரவ பிரதமர் பார்வையிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, வரையறுக்கப்பட்ட இலங்கை கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மகேந்திர விஜேசேகர, பொது மேலாளர் திலும் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நவீன வர்த்தக நிலைய வளாகம் பிரதமரினால் திறந்து வைப்பு! நவீன வர்த்தக நிலைய வளாகம் பிரதமரினால் திறந்து வைப்பு! Reviewed by Editor on March 05, 2021 Rating: 5