புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு அமலுக்கு வருகிறது.



70 வருடங்களாக பின்பற்றி வரும் ஸ்பான்சர்ஷிப் முறையை மறுசீரமைக்கும் சவூதி அரேபியாவின் முன்னோடித் திட்டமான தொழிலாளர் சீர்திருத்தம் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக சவூதி அரேபியா மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குகிறது. இந்த சட்டமானது உலகளாவிய தரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டமானது வீட்டுப் பணியாளர்களுக்கு பொருந்தாது. வீட்டு சாரதிகள், வீட்டில் பணிபுரிபவர்கள், தோட்டத்தில் வேலை செய்பவர்கள், விவசாயி ஆகிய பிரிவுகளில் உள்ளவர்களுக்கு இந்த புதிய தொழிலாளர்  சட்டம் பொருந்தாது. இவர்களுக்கு புதிய சட்டம் ஏற்றப்படும் என்று மேலும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

சவூதி அரேபிய வரலாற்றில் இது ஒரு சகாப்தம் ஆகவே கருதப்படுகிறது. இச்சீர்திருத்த முயற்சி, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையிலான ஒப்பந்த உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும்  இது சவுதி வேலைவாய்ப்பு சந்தையில் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய சேவையின் மூலம் ஒப்பந்தம் காலாவதியான ஒரு வெளிநாட்டு தொழிலாளர் அவரது நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துக்கு தானாக பணிமாற்றம் செய்து கொள்ளளாம். 

எக்சிட் ரீ-என்ட்ரி விசாக்களை மின்னனு முறையில் தனது நிறுவனத்திற்கு தெரிவித்துவிட்டு தாமாக பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் Final exit விசாக்கள் மூலம் வெளிநாட்டு தொழிலாளி ஒப்பந்த காலம் முடியும் முன்னரோ அல்லது ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வழிவகை செய்கிறது.

அதேபோல் பைனல் எக்ஸிட் அல்லது எக்ஸிட் re-entry அடிக்கும் பொழுது உங்கள் நிறுவனத்திற்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்‌‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு அமலுக்கு வருகிறது. புதிய தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பு அமலுக்கு வருகிறது. Reviewed by Editor on March 15, 2021 Rating: 5