ஊவா மாகாண ஆளுநர் ஸ்தலத்திற்கு விஜயம்!!!

பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம்கட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்து அப்பிரதேசத்தில் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதன் பின்னர், விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ஊவா மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.முஸம்மில் நேரில் சென்று ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் அவர் கேட்டறிந்துள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பில் PCR பரிசோதனைகளை மேற்கொண்டு கூடிய விரைவில் உடல்களை குடும்பத்தினருக்கு வழங்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையாக்கத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்குமாறும் வைத்தியசாலை அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை,  காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கின்றேன் என்றும் ஆளுநர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.


ஊவா மாகாண ஆளுநர் ஸ்தலத்திற்கு விஜயம்!!! ஊவா மாகாண ஆளுநர் ஸ்தலத்திற்கு விஜயம்!!! Reviewed by Editor on March 20, 2021 Rating: 5