
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33வது இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி தலைமையில் அக்கரைப்பற்று கரம் நிலையத்தில் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் ஓய்வு பெற்ற புள்ளிவிபரத்திணைக்கள உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான ஐ.எல். சரிப்டீன், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கழகங்களுக்கிடையிலான இறுதி சுற்றுப்போட்டியில் சன்றைஸ் இளைஞர் கழகமும் ஹிஜ்ரா இளைஞர் கழகமும் தனி மற்றும் இரட்டையர் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
முதலாம் இடத்தினை இரு பிரிவுகளிலும் சன்றைஸ் இளைஞர் கழகம் பெற்றதுடன் இரண்டாம் இடத்தினை ஹிஜ்றா இளைஞர் கழகம் பெற்றது.
முதலாம் இடத்தினை பெற்ற சன்றைஸ் இளைஞர் கழகம் மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
