முதல்வர் ஸகி தலைமையில் அபிவிருத்தி பணிகள் துரிதம்!!!!



(றிஸ்வான் சாலிஹூ)

கிராமிய வீதி அபிவிருத்தி அமைச்சின் கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பாலங்களையும், அதன் அமைவிடங்களையும் அக்கரைப்பற்று மாநகர சபையின் கெளரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் இன்று (13) சனிக்கிழமை பார்வையிட்டார். 

கெளரவ மாநகர முதல்வரின் இக்கள விஜயத்தின் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.பீ. அலியார், நிறைவேற்று பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஏ.எல். நியாஸ் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை பொறியியலாளர் ஜே.ஆகில் ஆகியோர் உள்ளிட்ட தொழில் நுட்ப குழுவினரும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


முதல்வர் ஸகி தலைமையில் அபிவிருத்தி பணிகள் துரிதம்!!!! முதல்வர் ஸகி தலைமையில் அபிவிருத்தி பணிகள் துரிதம்!!!! Reviewed by Editor on March 13, 2021 Rating: 5