இலங்கை தேசியக்கொடி தொடர்பில் சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை..!


ஒரு நாட்டின் அடையாளமான தேசியக் கொடிக்கு முழு மரியாதை அளிக்க வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு என்று கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

அனைத்து சூழ்நிலைகளிலும் சீனா இலங்கையின் நெருங்கிய நண்பணாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமைதி, செழிப்பு மற்றும் கௌரவத்திற்கும் மற்றும் சர்வதேச அளவிலும் சீனா இலங்கையை ஆதரிக்கும் என்று கூறியுள்ளது.

இலங்கை தேசியக் கொடியை சீன உற்பத்தியாளர் ஒருவர் கால் மிதிக்கும் கம்பளத்தின் மீது அச்சிட்டு விற்பனை செய்வது குறித்து இலங்கை அரசு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்பு அமேசான் வலைத்தளம் மூலம் விற்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள அலிபாபா வலைத்தளம் மூலம் இலங்கை கொடியிடப்பட்ட கம்பளம் விற்பனை செய்யப்படாது என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தேசியக்கொடி தொடர்பில் சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை..! இலங்கை தேசியக்கொடி தொடர்பில் சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை..! Reviewed by Editor on March 13, 2021 Rating: 5