காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் ஒரே இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை - நஸீர் அஹமட்

 


கொரோனா சிகிச்சை நிலையமாக தற்போது  இயங்கி வரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை காத்தான்குடி மக்களின் அவசியத் தேவை கருதி வைத்தியசாலையின் அதே கட்டிடத் தொகுதியில் இயங்க வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொரோணா சிகிச்சை நிலையமாக காத்தான்குடி வைத்தியசாலை செயற்பட்டு வருவதனால் வைத்தியாசாலையின் சில பிரிவுகள் வேறு இடங்களில் இயங்கி வந்தது. இதனால் பொது மக்களும் வைத்தியசாலை நிறுவாகமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.  



இதனை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்தில் கொண்டு வந்ததை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்கள் சுகாதார அமைச்சரோடும், சுகாதார தொழிநுட்ப பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இன்று (13) சனிக்கிழமை காத்தான்குடி வைத்தியசாலைக்கு சுகாதார தொழிநுட்ப பிரிவின் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் Covid - 19 செயலணியின் பொறுப்பாளருமான Dr. அன்வர் ஹம்தானி அவர்களும் வைத்தியர் குழுவினரும் பாராளுமன்ற உறுப்பினரோடு விஜயம் செய்து துரித நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் காத்தான்குடி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. எம்.எஸ்.எம் ஜாபிர், காத்தான்குடி பள்ளிவாயல் சம்மேளனத் தலைவர் ஏ.எம் தௌபீக் (Eng), காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அபிவிருத்திக்குழுவின் செயலாளர் வைத்தியர் மாஹிர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் யு.எல்.எம்.என் முபீன், ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம்.சரூஜ் , ஏ.ஏ நாசர் (முன்னாள் தவிசாளர்), எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் (ஒய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் ஒரே இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை - நஸீர் அஹமட் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் ஒரே இடத்தில் இயங்க வைக்க நடவடிக்கை - நஸீர் அஹமட்   Reviewed by Editor on March 13, 2021 Rating: 5