(சிமாரா அலி)
இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்திருக்கும் அழகிய தீவு. காலம் தொடங்கி இந்த நாடு இதன் வளங்களுக்காவும் அழகுக்காகவும் பலரால் கவரப்பட்டது. இயற்கை துரைமுகம்,மலைகளும் அருவிகளும் வனங்களும் தேயிலை கொக்கோ ரப்பர் என்று இறைவனால் கொடுக்கப் பட்ட வரங்கள் பல உண்டு நம் தீவில்.
மூலிகைகள் என்றால் இலங்கை வனங்கள் தான்.அவை காக்கப் படுகின்றதா? அங்கு வாழும் அறிய வகை உயிரினங்களும் ஆதி குடி மக்களின் உறைவிடங்களும் பாதுகாக்கப் படுகின்றதா. மூத்த குடி மக்கள் என்பவர்கள் நமது நாட்டின் பாரம்பரியங்களின் தொடர் அடையாளம். இன்று காடழிப்பினால் அவர்களின் வாழ்க்கை நிலை மிக கஷ்டத்துக்குள்ளாகி இருக்கின்றது.அவர்கள் தாமே உணவுபொருட்களை விதைத்து அறுவடை செய்து உண்டு வாழ்பவர்கள் .
இன்று காடழிப்பினால் ஏக்கர் கணக்கில் அவர்களின் வாழ்விடங்கள் கைப்பற்றப்படுகின்றது. மக்கள் வாழும் இடங்களையே வனங்களுகு சொந்தம் என்ற குரல்கள், இன்று ஏன் பாரிய அளவு வன அழிப்பின் போது மெளனிக்கின்றது. இவர்களின் நாட்டு பற்று இவ்வளவுதானா அல்லது சொந்த விருப்பு வெறுப்புகளா?
எமது வனங்களில் 24ஆயிரங்களுக்கு மேலான உயிரினங்கள் வாழ்கின்றன. இப்போது அவை அழிந்து வருவது இந்த வன அழிப்பும் ஒருகாரமாக இருப்பதோடு, இருப்பிடங்களை இழந்து வரும் உயிரினங்களை சில மூழிகைகள் மூலம் அழிப்பதும் காரணம். ஆதி குடி மக்கள் தனது உணவுக்கு எப்போதும் ஆண் பிராணிகளையே வேட்டையாடுவர்.
பெண் உயிரினக்களை இனப்பெருக்கத்துக்காக விட்டு விடுவர்.அது மட்டுமன்றி ஒரு முறை வேட்டையாடினால் அதை மூன்று மாதங்கள் வரை பதப்படுத்தியே வைப்பார்கள். இப்போது அவர்களுக்கு மாமிசங்கள் இல்லாமல் இருப்பதால் உணவுக்கு.மீண்களை குறிப்பிட்ட காலங்களுக்கு இடைப்பட்ட நாட்களி அவைகளை உணவாக்கிக் கொள்கின்றனர்.
அத்தோடு உயரங்களில் அழிவினால் விளைச்சல் குறைந்தும் வருவதாக அவர்கள் விசனப்படுகின்றனர். நமது நாட்டின் கால நிலைக்கு மிக முக்கியமான இடத்தை வகிப்பதும் நமது வன வளங்கள். இவை அழிக்கப் படுமேயானால், நாமும் ஆக்சிஜன் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வருங்காலத்தில் வரும் அதுவும் இறக்குமதி செய்து.
அதேபோல கடுமையான வரட்சியோடு கூய யுகத்தையே நமது சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டி இருக்கும்.இவற்றுக்கு முற்றுப் புள்ளிவைக்க மனிதனின் வாழ்விடங்களை வன அழிப்பு என்ற நாட்டு நலன் விரும்பிகளும் இயற்கை காப்பாளர்களும் இன்னும் ஏன் இதை தடுக்க முற்படவில்லை என்பது எனது கேள்வி.
வனங்களில் வாழும் உயிரினங்களில் நமது ஆதி குடி மக்களும் சேர்வர். அவர்கள் காசுக்கு மாரடிக்கும் கூட்டமோ மாட மாளிகை கட்டி வாழும் ஆடம்பர விரும்பிகளோ அல்ல அவர்கள் காட்டையும் நாட்டையும் நேசித்து வாழும் மனிதர்கள். அவர்களும் நம்மை போன்ற உயிர்கள் . அவர்களுக்கு இருக்கும் நாட்டு வளங்காலம் மீதான கவலை நிச்சயமாக நமக்கும் இருக்க வேண்டும்.அப்படி இருந்தால் மட்டுமே அடுத்த யுகம் பசுமையும் செழிப்பும் கொண்டதாக இருக்கும் வனங்களைக்காப்போம். மனிதம் வளர்ப்போம்.
Reviewed by Editor
on
March 18, 2021
Rating:
