
ஏறாவூர் பிரதேசத்தில் சமகாலத்தில் எதிர்கொள்ளப்படும் போதைப் பொருள்
பாவனை மற்றும் விற்பனை உட்பட சுகாதார நடைமுறை , போக்குவரத்து ஏற்பாடுகள், விபத்துக்களை குறைத்தல் உட்பட பல்வேறு அடையாளப்படுத்தப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நகர முதல்வர் நழீம் ஹாஜி தலைமையில் இன்று புதன்கிழமை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
ஏறாவூரில் இருந்து போதையை இல்லாது ஒழிக்கும் தவிசாளரது நழீம் ஹாஜியாரின் பிரதான எண்ணக்கருவில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேன அவர்கள் கலந்து கொண்டதுடன் ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஷவாஹிர், பிரதி தவிசாளர் ரெபுபாசம், ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளினது உறுப்பினர்களான ஜெமில் , நிசார் , பிரபாகரன் , ஜௌபர், சாஜித் , மாஹிர் ஆகியோருடன் சபையின் செயலாளர் சியாவுல் ஹக் , சுகாதார வைத்திய அதிகாரி சாபிரா வசீம் , ஏறாவூர் ஆதார வைத்தியசாலை மனநல மருத்துவர் , கோட்டக்கல்வி அதிகாரி, பிரதேச செயலக நிருவாக அதிகாரி , பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் , ஜம்இய்யத்துல் உலமா ,வர்த்தக சங்கம் , மற்றும் பொது அமைப்புக்கள் , பாடசாலை அதிபர்கள், விளையாட்டு கழக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் எமது பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை, வழிப்பறிக் கொள்ளை, இரவு நேர கொள்ளை என்பவற்றை இல்லாதொழிக்க இரவு நேரங்களில் உள்ளக விதிகளில் பொலிசாரை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்,
சுற்றாடலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் , நகர எல்லைகளுக்குள் பிரதான வீதிகளில் ஏற்படும் வாகன நெரிசலையும் வீதி விபத்துக்களையும் தடுக்கும் நோக்கில் வேக கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வீதி போக்குவரத்து அதிகாரிகளை நியமித்தல்,
பாசாலை ஆரம்பிப்பு மற்றும் முடிவடையும் நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பொலிசாரை கடமையில் ஈடுபடுத்துதல், கொவிட் 19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாக சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துதல் .
மற்றும் வாகனத் தரிப்பிடமாக தத்தமது வீடுகளுக்கு முன்னாள் உள்ள வீதிகளை பயடுத்தி வாகன நெரிசலை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது போதை பாவனை தொடர்பிலும் , அதனோடு தொடர்பான கொள்ளை உட்பட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல் , பிரதேசத்தில் சுகாதார மேம்பாடுகள் மற்றும் அனைத்து விடயங்கள் தொடர்பில் பொலிஸாரின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் உறுதியளிக்கப்பட்டதுடன், அனைத்து தரப்புக்களும் ஒருங்கிணைந்து செயற்பட்டால் மாத்திரமே இதனை முற்றாக இல்லாமல் ஆக்கி , ஏனைய விடயங்கள் தொடர்பிலும் முழு வீச்சுடன் செயலாற்ற முடியும் என தெரிவித்தார்.
Reviewed by Editor
on
March 17, 2021
Rating:
