(றிஸ்வான் சாலிஹூ)
2020ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியின் 14 சாதனை செல்வங்களையும் பாராட்டி கெளரவிக்கும் பெரு விழா இன்று (10) சனிக்கிழமை காலை கல்லூரி அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சாதனை செல்வ மாணவர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ், பதக்கம் மற்றும் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதோடு, அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினால் நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவையும் அனைவரினதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.அஹமட் ஹாசீம் அவர்களும், கெளரவ அதிதியாக வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜீ.பஸ்மில், வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான் அவர்களும், விசேட அதிதிகளாக ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.சீ.ஜூஹைஸ், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ.தாஹீர், அல்-கமர் வித்தியால அதிபர் எச்.தாலீப், அக்கரைப்பற்று அல்-முன்வ்வரா கனிஷ்ட கல்லூரி அதிபர் எம்.ஐ.உவைஸ், ஓய்வு பெற்ற ஹிஜ்ரா வித்தியால அதிபர் எம்.எச்.தாஸீம், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என்று பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.