63 வருட கால பாடசாலை வரலாற்றில் சிறப்பாக நடந்தேறிய இப்தார் நிகழ்வு!!!





(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாகத்திற்குட்குட்ட அக்/அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் 63 வருட கால  வரலாற்றில், பாடசாலை ஆசிரியர்கள் அவர்களின் குடும்பம் சகிதம் கலந்து கொண்ட முதலாவதும், மிகவும் பிரமாண்டமான முறையில் அனைவரினதும் வரவேற்பை பெற்றதும், ஏனைய பாடசாலைகளுக்கு ஓர் முன்னுதாரணமாக விளங்கியதுமான பாடசாலையின்  பழைய  மாணவர்     சங்கத்தின்     ஏற்பாட்டில்      இடம்பெற்ற  "இப்தார் ஒன்றுகூடல் - 2021" நிகழ்வு கல்லூரியின் அதிபரும், பழைய மாணவர் சங்க தலைவருமான எஸ். றிபாயுடீன் தலைமையிலும், வழிகாட்டலிலும் பாடசாலையின் திறந்த வெளியரங்கில் வெள்ளிக்கிழமை (23) மாலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.






நிகழ்வில் வரவேற்புரையாற்றிய சங்கத்தின் செயலாளர் ஆசிரியர் நபீன் தனதுரையில்,





நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய அதிபர் எஸ். றிபாயுடீன் தனதுரையில்.... 

இப்பாடசாலையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் 2019-2020ஆம் காலப்பகுதிக்கான பழைய மாணவர் சங்கமானது ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கிடையிலான புரிந்துணர்வுடனான சந்திப்பு என்ற அடிப்படையில் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திறந்த அழைப்பிதழ் மூலம் அவர்களை அவர்களின் குடும்பம் சகிதம் அழைத்து, வரவேற்பு இப்படியான ஒரு பாரிய வரவேற்பை பெற்ற இப்தார் நிகழ்வினை (நோன்பு திறக்கும் நிகழ்வு) ஏற்பாடு செய்து அதில் சாதனை படைத்தமை இந்த பாடசாலை அதிபர், பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.


பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களால் பழைய மாணவர் சங்க சகல நிர்வாக சபை அங்கத்தவர்களுக்கும் ஞாபக சின்னம் வழங்கி கெளரவித்ததோடு, பாடசாலையின் " சிமாட் வகுப்பறைக்கு " தளபாடம் மற்றும் தரை விரிப்பு வழங்கிய ஏ.கே.றிப்கான் அவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தமையும் சிறப்பம்சமாகும்.












நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி மற்றும் அபிவிருத்தி) திருமதி. எம். சித்தி பாத்திமா அவர்கள் உரையாற்றுகையில்,


இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. கலீலூர் றஹ்மான் கெளரவ அதிதியாகவும், விசேட அதிதியாக பாடசாலை பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களும், அதிதிகளாக  அக்கரைப்பற்று கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பாடசாலையின் உதவி மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




























63 வருட கால பாடசாலை வரலாற்றில் சிறப்பாக நடந்தேறிய இப்தார் நிகழ்வு!!!  63 வருட கால பாடசாலை வரலாற்றில் சிறப்பாக நடந்தேறிய இப்தார் நிகழ்வு!!! Reviewed by Editor on April 25, 2021 Rating: 5