
(றிஸ்வான் சாலிஹூ)
நோன்பு காலங்களில் நோயாளர்களைப் பார்வையிடவருகின்ற பொதுமக்கள் மாலை வேளையில் தங்களுடைய இப்தார் மற்றும் ஏனைய கலாச்சார நடவடிக்கைகளை நடைமுறைப்படுதுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனத்திற்கொண்டு மாலை வேளையில் நோயாளர்களை பார்வையிடுவதற்காக வருகின்ற நோயாளர்களின் உறவினர்களை வைத்தியசாலையினுள் அனுமதிக்கின்ற நேர அட்டவணை பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எப்.மப்ரூகா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மாலை நேர அட்டவணை பிற்பகல் 04:30 இலிருந்து 05:30 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, தங்களது விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களிடம் இத்தகவலைத் தெரியப்படுத்துவதன் மூலம் இச்செயற்முறையினை ஒழுங்குற நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் என்றும் தர முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
Reviewed by Editor
on
April 25, 2021
Rating: