தெரணியகலை பிரதேச சபையின் தவிசாளர் சட்டவிரோதமாக 98 நீர் அளவுமானிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெரணியகலை கும்புருகம பிரதேசத்தில் நீர் திட்டமொன்றிற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 477 நீர் அளவு மானிகள் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இனந்தெரியாத சிலரால் களவாடப்பட்டிருந்தது. பின்னர் குறித்த களஞ்சியத்தின் எழுத்தாளர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கு அமைய 98 நீர் அளவீட்டு மானிகளுடன் சந்தேக நபரான தெரணியகலை பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
98 நீர்மானிகளை வைத்திருந்த தவிசாளர் கைது....
Reviewed by Editor
on
April 17, 2021
Rating:
