”கிழக்கு வாசலில்" நடைபெற்ற கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப்பிரார்த்தனை...


(றிஸ்வான் சாலிஹு)

சாய்ந்தமருது மாளிகைக்காடு‌ முகையதீன் ஜும்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவராக இருந்து அரும் பணியாற்றி அண்மையில் இவ்வுலகைப்விட்டு பிரிந்து சென்ற மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா சேர் அவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் ஓதி துஆப் பிரார்த்தனை செய்யும் நிகழ்வு தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா [பா.உ] அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று "கிழக்கு வாசலில்" நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றது.






இந்நிகழ்வில், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களும், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசல் நிருவாகிகள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சாய்ந்தமருது சுயேற்சைக்குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் அத்துடன் பொது மக்கள் மற்றும் நலன்விரும்பிகள்‌ என பலரும் கலந்து கொண்டனர்.




”கிழக்கு வாசலில்" நடைபெற்ற கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப்பிரார்த்தனை... ”கிழக்கு வாசலில்" நடைபெற்ற கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப்பிரார்த்தனை... Reviewed by Editor on April 17, 2021 Rating: 5