BBB விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு!!!


(றிஸ்வான் சாலிஹூ)

அட்டாளைச்சேனை அல் -ஆர்யன் விளையாட்டுக் கழகம் அட்டாளைச்சேனை - 6 கடற்கரை விளையாட்டு மைதானத்தில் நடாத்திய மாபெரும் இரவு நேர மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி - 2021 இன் சாம்பியனாக அக்கரைப்பற்று BBB விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.


இறுதி நிகழ்வின் பிரதம அதிதியாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய கெளரவ அல்ஹாஜ் ஏ.எல்‌.எம்.நஸீர் அவர்களினால் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கழகத்திற்கான வெற்றிக் கிண்ணமும் மற்றும் ரூபா30000/- பணப்பரிசிலும் வழங்கி வைத்தார்.



இச்சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை New Star அணியினரை எதிர்த்தாடிய அக்கரைப்பற்று BBB அணியினர் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.



இரண்டாம் இடத்தை பெற்ற அட்டாளைச்சேனை நியு ஸ்டார் அணியினருக்கு கிண்ணமும், ரூபா20000/- பணப் பரிசிலும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

BBB விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு!!!  BBB விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு!!! Reviewed by Editor on April 19, 2021 Rating: 5