(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு புதிதாக வருகை தந்த அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களையும், முன்னாள் அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம். அஸ்லம் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (08) வியாழக்கிழமை காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் பாடசாலை ஆசிரியர் நலன்பேணும் குழுவினால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறியது.
நிகழ்வில், பாடசாலைக்கு புதிதாக வருகை தந்த அதிபர் மற்றும் முன்னாள் அதிபராக கடமையாற்றிய இரு அதிபர்களுக்கும் இக்குழுவினால் பொன்னாடை மற்றும் ஞாபகார்த்த சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதோடு, பாடசாலையின் சகல வளர்ச்சிப்படிகளிலும் தங்களால் முடியுமான வரை உதவி ஓத்தாசை புரிந்த பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு பாடசாலை நிருவாகத்தால் ஞாபக சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் பாராட்டக்கூடிய விடயமாகும்.
