கல்வி மேலதிகாரிகளை விடவும், சமூகம் அதிகமாக நினைவு கூர்வது பாடசாலையின் அதிபர்களைத்தான் - பணிப்பாளர் காசிம்
(றிஸ்வான் சாலிஹூ)
ஒரு கல்விச் சமூகம் வலயக் கல்விப் பணிப்பாளரையோ, பிரதி மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளரையோ, கோட்டக் கல்விப் கல்வி அதிகாரியையோ அல்லது ஆசிரிய ஆலோசகரையோ அதிகமாக நினைவு கூர்வதில்லை மாறாக சில நேரங்களில் மாத்திரம் இவர்களை சுட்டிக் காட்டுவதே தவிர, பாடசாலைகளின் அதிபர்களைத்தான் பரம்பரை பரம்பரையாக அதிகமான நேரத்தில் நினைவுகூர்ந்து அவர்களை வாழ்த்துவதும் பாராட்டுவதும் ஆகும். ஆகவே தான் அதிபர்களின் பணி என்பது எவ்வாறு மகத்துவமும் முக்கியமானதும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது என்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பணிப்பாளர் அஷ்ஷேக் அல்-ஹாஜ் ஏ.எல்.முஹம்மட் காசிம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கோட்ட வலயப் பாடசாலைகளில் அதிபர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற ஐந்து அதிபர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வின் போதே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.காசிம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்று வலயக் கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள் சங்கம் ஏற்பாடு செய்த "ஓய்வு பெற்று சென்ற அதிபர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு" ஞாயிற்றுக்கிழமை (11) காலை சங்கத்தின் தலைவரும் அக்கரைப்பற்று அல்-முன்வ்வரா கனிஷ்ட கல்லூரியின் அதிபருமான எம்.ஐ.உவைஸ் தலைமையில் "மென்கோ காடர்னில்" இடம்பெற்றது.
அக்கரைப்பற்று கோட்ட வலயப் பாடசாலைகளில் அதிபர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுச் சென்ற அதிபர்களான ஏ.ஜீ.அன்வர், ஏ.எல்.இக்பால், ஏ.எம்.ஏ.ஜெலீல், எம்.எச்.எம்.தாஸீம், திருமதி சாலிஹா அப்துல் கபூர் ஆகியோர்களுக்கு அதிபர் சங்கம் சார்பில் வாழ்த்துப்பா, நினைவுப் பரிசில்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஏ.எல்.காசிம் அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலிலூர் றஹ்மான் அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, சங்கத்தின் செயலாளரும் அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியின் அதிபருமான எஸ்.றினோஸ்டீன் நன்றியுரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
