
(ஏ.எம்.முஹம்மட் றியாத்)
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் கணனி வங்கி சேவை ஆரம்ப நிகழ்வு இன்று (11) ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சியாக நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் சமூர்த்தி மாவட்ட பணிப்பாளருமான வீ.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கணனிச் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, முன்னாள் சட்ட ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் எ.எல்.எம்.சலீம் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம். பழீல்,கணக்கு உதவியாளர் ஏ.சி முகம்மட் உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
