
கத்தாரில் நடைபெறவுள்ள பீபா உலகக் கிண்ணத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று கட்டார் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளும் அனைவரும் தடுப்பூசிகள் போட்டுள்ளார்களா என்பது உறுதிப்படுத்தப்படும். அது குறித்து தடுப்பு மருந்து நிறுவனங்களுடன் பேசிவருவதாக கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்தார்.
கொவிட் நோய்ப்பரவல் உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டியை நடாத்துவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தோடு, இச்சுற்றுப்போட்டியின் அனைத்து ஆட்டங்களும் விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் சூழ நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
April 29, 2021
Rating: