அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (22) வியாழக்கிழமை அக்கரைப்பற்று முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நாளாந்தம் கடற்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள் விட்டுச் செல்லும் திண்மக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசம் மாசுபட்டிருக்கும் நிலையில் அவற்றினை அகற்றும் பொருட்டு, இன்றைய தினம் கௌரவ முதல்வர் அவர்களால் காத்தான்குடி நகர சபையில் இருந்து Beach Cleaner (கடற்கரை துப்பரவாக்கி இயந்திரம்) வரவழைக்கப்பட்டு இப்பணிகள் நடந்தேறியமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வகையில்,குறித்த இயந்திரத்தை வழங்கி உதவிய காத்தான்குடி நகர சபை தவிசாளர் கௌரவ ஏ.எச்.எம். அஸ்பர் அவர்களுக்கு அக்கரைப்பற்றின் கௌரவ மாநகர பிதா தமது ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்தார்.
அக்கரைப்பற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் வாராந்தம் நடைபெறவுள்ள நிலையில், கடற்கரையை பயன்படுத்தும் பொதுமக்கள் அங்கு குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்களை விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் மாநகர சபை அறிவுறுத்துகிறது என்று முதல்வரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
April 22, 2021
Rating:



