பல்கலைக்கழகம் மீள திறக்கப்படாது - கல்வி அமைச்சு


நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழகம் மீள திறக்கப்படாது - கல்வி அமைச்சு பல்கலைக்கழகம் மீள திறக்கப்படாது - கல்வி அமைச்சு Reviewed by Editor on April 22, 2021 Rating: 5