இரு மீனவர்களின் உயிரிழப்பால் சாய்ந்தமருது சோகத்தில்!!!



சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் ஜனாஸாவாக கரை திரும்பிய சோக சம்பவம் இன்று (30) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது.

கடலில் பல நாட்கள் தங்கி இருந்து மீன் பிடிக்க சென்ற சாய்ந்தமருதை சேர்ந்த இப்ராஹிம் இக்பால் (42), எம்.எஸ். அர்சாத் (35) ஆகியவர்களே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

படத்தில் உள்ளவர் மின்னலுக்கு உள்ளாகி மரணித்த மர்ஹும் இப்றாகீம் இக்பால் ஆவார்.


இரு மீனவர்களின் உயிரிழப்பால் சாய்ந்தமருது சோகத்தில்!!! இரு மீனவர்களின் உயிரிழப்பால் சாய்ந்தமருது சோகத்தில்!!! Reviewed by Editor on April 30, 2021 Rating: 5