இலங்கையினை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் (21) இரண்டு வருடங்கள் நிறைவுபெறும் இந்த நிலையில், இந்த தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்று வருகின்றன.
அதனடிப்படையில் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் இன்று காலை விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த தேவாலயத்தில் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக இன்றைய தினம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் இடம்பெற்ற இந்த விசேட வழிபாட்டில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் காயமடைந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில், இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடையவும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீட்சிபெறவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதோடு, நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவும் வழிபாடுகள் நடாத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அஞ்சலி நிகழ்வுகள்...!
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:



