அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நினைத்த கூட்டமே ஈஸ்டர் தாக்குதலை கட்டவிழ்த்தியது - மல்கம் ரஞ்சித் ஆண்டகை


மததீவிரவாதத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த நினைத்த குழுவொன்றே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மததீவிரவாதத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்த நினைத்த குழுவொன்றே உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்தது என்பது எமக்கு பெரும் கவலையை தருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உயிரிழந்த ஒன்பது பேரின் நினைவாக பொரளை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை திறந்துவைத்த பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

தனது இனமதத்தை சாராதவர்களுக்கு எவருக்கும் எவரும் தனிப்பட்ட இலக்குகள் நோக்கங்களிற்காக  தீங்கிழைக்ககூடாது. இது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களிற்கும் பொதுவான விடயமாகும்.

அவ்வாறான விடயங்கள் இடம்பெற்றால் உலகம் துரதிஸ்டவசமாக மோசமான இடமாக மாறிவிடும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மதம் தொடர்பான வெறித்தனத்தினால் இடம்பெறவில்லை மாறாக அதிகாரத்தை கைப்பற்றி வலுப்படுத்துவதற்காக அது இடம்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்படுவதற்காக உலகம் காத்திருக்கின்றது என கர்தினால் மல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நினைத்த கூட்டமே ஈஸ்டர் தாக்குதலை கட்டவிழ்த்தியது - மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நினைத்த கூட்டமே ஈஸ்டர் தாக்குதலை கட்டவிழ்த்தியது - மல்கம் ரஞ்சித் ஆண்டகை Reviewed by Editor on April 19, 2021 Rating: 5