
அட்டாளைச்சேனை ஹிரோஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி இன்று (9) வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் செயலாளர் அன்வர் நெளஷாத் தலைமையில் இடம் பெற்றது.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்.கல்முனை பிரதி மேயர் றகுமத் மன்சூர்.ஹிரோஸ் கழகத் தலைவர் ஹம்ஸா சனூஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் சூசிற்றி லக்கி அணிக்கெதிராக இரண்டு கோல்களை புகுத்தி சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.
போட்டி நாயகனாக அறூஸ் இமாத் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிரோ கிண்ணம் சூசிற்றி வசம்!!!
Reviewed by Editor
on
April 09, 2021
Rating:
