தமிழ் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு!!

 


(றிஸ்வான் சாலிஹூ)

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் மொழிப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், பௌதீக மற்றும் மனிதவள குறைபாடுகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் சுகாதார பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. பி.பி. விஜயரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வெல உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


தமிழ் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு!! தமிழ் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினை தொடர்பில் ஆராய்வு!! Reviewed by Editor on April 09, 2021 Rating: 5