
இலங்கையில் ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது என்று உலமா சபை செயலாளர் மௌலவி தாஸிம் தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று தலைபிறை தென்பட்டால் நாளை முதல் புனித ரமழான் ஆரம்பமாகும். நாட்டின் எப்பகுதியிலும் பிறை தென்படாத போது நாளை மறுதினம் முதல் ரமழான் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
