
(றிஸ்வான் சாலிஹூ, பட உதவி - மாதவன்)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுவருட களியாட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (04) காலை 7.00 மணியளவில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹீர் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், நலன்புரி சங்க உறுப்பினர்கள், தாதியபரிபாலகர், தாதியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பல்வேறுபட்ட களியாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, இதில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசீல்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் தமிழ் சிங்கள புத்தாண்டு களியாட்ட நிகழ்வு!!!
Reviewed by Editor
on
April 04, 2021
Rating:
