கத்தாரில் அதிகரித்துள்ள இலங்கையர்களின் கொரோனா மரணங்கள்!


 

எச்சரிக்கை பதிவு!

அன்பான கத்தார் வாழ் இலங்கை சகோதர-சகோதரிகளே கொஞ்சம் சிந்தியுங்கள்!

கடந்த இரண்டு மாதங்களாக பல ஜனாஸாக்களை அடக்கம் செய்துவிட்டு எழுதுகிறோம்.

நாம் பல தேவைகளின் நிமித்தம் சொந்தநாட்டில் இருந்து கத்தாரில் பல கஷ்டங்கள் சிரமங்களுக்கு மத்தியில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். குடும்பத் தேவைகளுக்காக குடும்பத்தை பிரிந்து வாழும் நமது வருகையை எதிர்பார்த்து நமது தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்… etc என எல்லோரும் நமக்காக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நாம் மரணித்த செய்தி அவர்களின் காதுகளுக்கு கிடைத்தால் ஏற்படும் வலியை வேதனையை கொஞ்சம் நினைத்து பாருங்கள். அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்வது? உங்களின் இழப்பை அவர்களால் ஈடு செய்ய முடியும் என நினைக்கிறீர்களா??

அன்பான உறவுகளே!

ஒவ்வொரு ஜனாஸா அடக்கம் செய்யும் போதும், மரணித்தவர்களின் கதைகளை காதினால் கேற்கும் போது மனம் அழுகிறது. எத்தனை எதிர்பார்ப்புக்கள், எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், இவைகள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதளவு வலிகளை ஏற்படுத்துகிறது. உங்களிலும் பலர் இதை அறிந்திருப்பீர்கள்.

ஆனால், இறைவனின் நாட்டம் எதுவோ அது நடந்தே தீரும். ஆனால், நமது கரங்களால் அவைகளை தேடிக்கொள்வதில் இருந்து தவிர்ந்து கொள்வோம்.

அன்பான சகோதர-சகோதரிகளே!

அண்மைக்காலமாக covid19 மரணங்கள் மிக அதிகமா காணப்படுகிறது மட்டுமல்லாமல் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களும் அதிகமாக காணப்படுவதால், எம்மை, எமது குடும்பத்தை இந்த கொடிய நோயிலிருந்து பாதுகாப்போம். அதற்கு தேவையான சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பேணுவோம். கத்தார் நாட்டின் சட்டதிட்டங்களை முறையாக பின்பற்றுவோம்.

இழந்த பின் சிந்திப்பதை விட இழக்கும் முன் சிந்தித்து செயல்படுவோம்.


(THANKS - CDF QATAR COMMUNITY Awareness)


கத்தாரில் அதிகரித்துள்ள இலங்கையர்களின் கொரோனா மரணங்கள்! கத்தாரில் அதிகரித்துள்ள இலங்கையர்களின் கொரோனா மரணங்கள்! Reviewed by Editor on April 17, 2021 Rating: 5