காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் அங்குள்ள எமது மாணவர்களின் நலன் கருதி "நவீன தகவல் தொழிநுட்ப அறை" ஒன்றினை ஏற்படுத்தி கொடுக்க Iconic Youths அமைப்பு முன்வந்துள்ளது என்று அந்த அமைப்பின் தலைவர் உ.லெ.தில்ஷான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த செயற்திட்டத்திற்கான முதற்கட்ட பணியாக அறைக்கான பூச்சு வேலைகள் எமது அமைப்பின் வாலிபர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் எமது உடன்பிறவா சிறார்களும் சிறந்த கல்வியின் மூலம் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என்ற நன்னோக்கோடு இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிதியுதவியினை வழங்கிய அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாட்டில் தொழில் புரியும் சகோதரருக்கும், களப்பணி புரியும் எமது வாலிபர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சிறந்த இம்மை மறு வாழ்வை கொடுக்க பிரார்திப்போமாக என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொழிநுட்ப அறைக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்..
Reviewed by Editor
on
April 09, 2021
Rating:
