(றிஸ்வான் சாலிஹூ)
வெளிநாடு செல்ல முயற்ச்சிப்பவர்கள் அல்லது வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கான தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் வழங்க தொழில்நுட்ப கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில்நுட்ப கல்வி அமைச்சும் சர்வதேச தொழிலாளர் தாபனமும் (UN ILO) இணைந்து செயற்படுத்தவுள்ள தொழிலாளர்களின் தகைமைகளை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ், வெளிநாட்டு தொழிலை எதிர்பார்த்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்களுக்காக தமது துறைகளில் NVQ சான்றிதழ்களை, முன் அனுபவத்தின் மூலம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆர்வமுள்ளவர்கள் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனை பிரிவிற்கு சமூகம் தந்து தங்களை பதிவு செய்து கொள்ள முடியும் என்பதோடு, மேலதிக விபரங்களுக்கு 067 2279865, 0705174343 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ள முடியும் என்று அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்றின் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
April 22, 2021
Rating:
