
(றிஸ்வான் சாலிஹூ)
உள்ளூராட்சி அபிவிருத்தி வலுவூட்டும்
திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அக்கரைப்பற்று காதர் ஓடாவியார் வீதி இன்று (17) சனிக்கிழமை அக்கரைப்பற்று கௌரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களினால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர மேற்கு வட்டார உறுப்பினர் ஏ.சீ.பதுறுதீன் மற்றும் முன்னாள் உறுப்பினர் என்.எம். நஜிமுதீன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி அவர்கள் குறித்த வீதியின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.
இப்தார் ஏற்பாடுகளுடன் நடைபெற்ற இந் நிகழ்வில்அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள்,புத்திஜீவிகள்,பொதுமக்கள் என மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீதி அபிவிருத்தியானது சிறப்பாக நிறைவடைந்தமையையிட்டு அப்பிரதேச பொதுமக்கள் கௌரவ முதல்வர் அவர்களுக்கும்,ஏனைய அதிதிகளுக்கும் விமர்சையான வரவேற்பினை வழங்கி,மானசீக நன்றிகளையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்.
