அதிகளவு வெப்பத்தினால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கு இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில்,
1. தண்ணீர் தாகம் ஏற்படும் வரை காத்திருக்காது அடிக்கடி நீரைப் பருகுங்கள் (வயதுவந்தவர் ஒருவருக்கு ஆகக்குறைந்தது 2.5 இலீற்றர்).
2. நீரிற்குப் பதிலாக இனிப்புச் சுவையூட்டப்பட்ட குடிபானங்களை அருந்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
3. முற்பகல் 11மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரையுள்ள காலப்பகுதியில் சூரியனின் வெப்பக்கதிர்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
4. இயலுமானவரையில் பருத்தித் துணியினாலான இளநிற ஆடைகளை அணியுங்கள்.
5. வெளியே நடமாடும் போது குடையொன்றைப் பாவியுங்கள் அல்லது தொப்பியொன்றை அணியுங்கள்.
6. வயோதிபர்,நோயாளிகள் மற்றும் சிறுவர்கள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதால் அவர்களை அக்கறையுடன் பராமரியுங்கள்.
நாட்டின் பல பிரதேசங்களில் முக்கியமாக தெற்கு மற்றும் மேற்குக் கரையோரப் பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக கூடியுள்ளமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த காலகட்டத்தில் உங்களினதும் ஏனையோரினதும் நன்மையைக் கருத்திற் கொண்டு மேற்கூறிய விடையங்களைப் பற்றி அவதானமாக இருங்கள் என்று அந்த பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
