சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பாலியல் விழிப்புணர்வு செயலமர்வு!!!


(றிஸ்வான் சாலிஹூ)

பாலியல் ஆரோக்கியத்தை ஊக்குவித்தல் மற்றும் பாலியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களிலிருந்து முற்காத்தல் ஆகிய செயற்பாடுகளில், சமுக சேவைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரதேசத்திற்குட்பட்ட, சமுக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (06) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், பாலியல் நோய்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம்.தில்ஷான் வளவாளராக கலந்து கொண்டு இது தொடர்பான ஆக்கப்பூர்வமான தெளிவுகளை விளங்கப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பாலியல் விழிப்புணர்வு செயலமர்வு!!! சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பாலியல் விழிப்புணர்வு செயலமர்வு!!! Reviewed by Editor on April 07, 2021 Rating: 5