(றிஸ்வான் சாலிஹூ)
"National Vocational Training Excellence 2020" விருது அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியின் கல்வி,கல்வி சாரா மற்றும் பெளதீக மேம்பாட்டின் அடைவுகளுக்காக அரசினால் கடந்த 05.04.2021 இல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கல்லூரியின் அதிபர் எம். சோமசூரியம் அவர்களின் தலைமையில் நேற்று (12) திங்கட்கிழமை கல்லுாரி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இவ்விருது பெற்றமைக்கு உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டி கெளரவிக்கும் பெரும் வெற்றி விழாவில் கல்லூரியின் ஸ்தாபகரும், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வின் போது அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரி முதல்தர கல்லூரியாய் முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், நிந்தவூர், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்கள், கல்லூரியின் பதிவாளர், பிரதி அதிபர், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், கல்லூரியின் ஆலோசனை குழு, நலன்விரும்பிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.