மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

(சர்ஜுன் லாபீர்)

கல்முனைக்குடி அஸ்-சுஹரா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இன்று (5) திங்கட்கிழமை பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதியா தலைமையில் பாடசாலை முற்றத்தில் நடைபெற்றது.



இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய சமூக மேம்பாடு பிரிவு பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ‌.வாஹீட் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னங்களை அணிவித்தார்.

பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் அமீர் ஏ பாரூக் உட்பட ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு Reviewed by Editor on April 05, 2021 Rating: 5