அசாம் மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம்....

இந்திய அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று (28) புதன்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.


இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதோடு, இது ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



அசாம் மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம்....  அசாம் மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம்.... Reviewed by Editor on April 28, 2021 Rating: 5