மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது!!!


யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இன்று (09) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு வவுனியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்கு முறை செயற்பாட்டிற்காக மாநகர காவல் படை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருந்த சீருடை, விடுதலைப் புலிகளின் காவல் துறையினரின் சீருடைக்கு ஒத்தான சீருடை என்று சமூக வலைத்தளங்களில் இதற்கு எதிராக விமர்சனங்கள் வெளிவந்ததை தொடர்ந்து இது தொடர்பில் விசாரணை செய்யவதற்காக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது!!! மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது!!! Reviewed by Editor on April 09, 2021 Rating: 5