
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவை எதிர்வரும் மே மாத இறுதிப்பகுதிக்குள் பூரணமாக செயற்படுத்த, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அதனை செயற்படுத்துவதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வாக்குறுதி அளித்தாக அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவரும் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் மாநகர சபை உறுப்பினர் சபீஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று விஷ்பரூபம் எடுப்பதாக கூறப்படுவதனால், எமது மக்களுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜவாகிர் அவர்களை நாம் சந்தித்து கலந்துரையாடினோம்.
கடந்தகால அனுபவங்களை வைத்து அதனையும் விட சிறப்பான ஒரு சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என கூறினார் வைத்திய அத்தியட்சகர் உறுதி மொழி வழங்கினார்.
மேலும், தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் அமைச்சராக இருக்கின்ற போது இந்த வைத்தியசாலைக்கு உருவாக்கப்பட்ட இந்த அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (ICU Unit) வளப்பற்றாக்குறை காரணமாக ஆரம்பிக்கப்படாமல் இருந்தது வந்தது. இது தொடர்பாக பலமுறை நாங்கள் அவருடன் பேசியிருந்தோம். இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற மே மாதத்திற்கு முன்னர் அதனை மக்கள் பாவனைக்கு கொண்டு வருவதாக அவர் வாக்குறுதி அளித்தார் என்று அவர் தெரிவித்தார்.
அத்தோடு, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக எங்களது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் சபீஸ் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
April 26, 2021
Rating: