
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம் இன்று (26) திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம், யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
Reviewed by Editor
on
April 26, 2021
Rating: