(றிஸ்வான் சாலிஹூ)
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களின் பணிப்பின் பேரில் நாட்டில் ஏற்பட்டுள்ள Covid நிலமையினை கருத்திற் கொண்டு 10 நாட்களுக்குள் 10,000 கட்டில்கள் அமைக்கும் நாடு தழுவிய செயற்திட்டம் தேசிய இளைஞர்கள் கழக சம்மேளனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தினால் 10 கட்டில்கள் நிர்மானிக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்று அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதித் தலைவர் உ.மு.தில்ஷான் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
இதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பங்களிப்பாக 50,000 நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதோடு ஏனைய நிதிகள் தனவந்தர்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்போடு நடைபெற்றுள்ளது அவர் தெரிவித்தார்.
இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்காக தயார் செய்யப்படும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு, இச் செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற பணிபுரியும் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் சார்பாக அவர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
